குச்சவெளி பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்க்கு சுற்றி வளைப்புக்கள் முன்னெடுப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது  குச்சவெளி பொலிஸாரும்,  இலங்கை மின்சார திருகோணமலை கிளை உத்தியோகத்தர்களும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்

அண்மைக் காலமாக நிலாவெளி,குச்சவெளி, கும்புறுப்பிட்டி, திரியாய்,மற்றும் செந்தூர் போன்ற பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக மின்சார சபை திருகோணமலை பிராந்திய காரியாலயத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இச்சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் முகாமையாளர் என்.பிரதீபன் தெரிவித்தார்

கடந்த வாரம் இப்பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஐவரை கைது செய்து திருகோணமலை பொலிஸாருடாக சட்டநடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார் இப்பகுதியில் இச்சுற்றிவளைப்புகள் ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்