வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குக: நாடாளுமன்றில் கோடீஸ்வரன்

வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு உடனடியாக தொழில்வாய்ப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். அன்றாடத் தேவைகளைகூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் பட்டதாரிகள் வீதியில் காணப்படுகின்றனர்.

அவர்களை விட தகுதி குறைந்தவர்கள் அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பாகவுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க வேண்டும். தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தொழிறசாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்