வடமராட்சியில் வெடிபொருட்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆழியவளை அபாய வெளியேற்றப்பாதை பனிக்கையடியில் குறித்த வெடிபொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பாதை வழியாக சென்றவர்கள் அனாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்டபோது அதற்குள் துருப்பிடித்த பழமையான நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும் கிறினெட் என்பன காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்