மாவை எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் வலி.வடக்கில் அபிவிருத்திப் புரட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவினால் ஒதுக்கப்பட்ட கம்பெரலியா நிதி ஊடாக வலி.வடக்கு பிரதேசத்தில் பாரிய வீதி அபிவிருத்திப் புரட்சி ஆரம்பமாகியுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 20 வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபையில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களையும், வெற்றியைத் தவறவிட்ட 4 கட்சி ஆதரவாளர்களையும் அழைத்து, 21 வட்டாரங்களையும் உள்ளடக்கிய முழு வலி.வடக்கு பிரதேச எல்லைகளையும் முழுமைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்தத்திட்டத்துக்காகத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் – 21 வட்டாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் – 21 உறுப்பினர்களுமே திட்ட முன்மொழிவுகளை வழங்கியுள்ளார்கள்.

தமிழரசுக்  கட்சி உறுப்பினர்களால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாக இந்த வீதிகளுக்கான நிதியாகிய 12 கோடியே 45 லட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒதுக்கியுள்ளார்.

இந்தத் திட்டங்கள் தொடர்பில் வலி.வடக்கு பிரதேசசபையின் அங்கீகாரத்துக்காகக் கடந்த 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனால் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் உறுப்பினரைத் தவிர, சகல கட்சிகளையும் சேர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தை ஆதரித்து அதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளனர்.

வலி.வடக்கில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள் வருமாறு:-

01.  ஜே – 212 – மயானவீதி புனரமைப்பு – 20 லட்சம்
02.  ஜே – 212 புளொட்சனல் வீதி – 15 லட்சம் ரூபா
03. ஜே- 213 – நீதிமன்ற வீதி முதலாவது இடது ஒழுங்கை – 10 லட்சம்
04. ஜே – 213 மல்லாகம் கட்டுவான் வீதி முதலாவது இடது ஒழுங்கை – 10 லட்சம்
05. ஜே – 214 ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வீதி 20 லட்சம்
06. ஜே – 214 நீதிமன்ற குறுக்கு வீதி (வடலி வீதி) 10 லட்சம்
07. ஜே – 215 அரசோலை வீதி 20 லட்சம்
08. ஜே – 215 செட்டிச்சோலை முதலாவது வலது ஒழுங்கை 10 லட்சம்
09. ஜே – 216 ராவத்தை வீதி 20 லட்சம்
10. ஜே – 217 அழுக்காய் கேணிக்கரை வீதி 20 லட்சம்

11. ஜே – 216 மண்குனியன் வழவு வீதி 10 லட்சம்
12. ஜே – 217 குளமணல் 4 ஆவது இடது ஒழுங்கை (மணல்புலம் வீதி) 20 லட்சம்
13. ஜே – 218 கெர்ப்பனிபிட்டி வீதி (விவசாய வீதி) 20 லட்சம்
14. ஜே – 219 குருவளை புளொட் சனல் றோட் 10 லட்சம்
15. ஜே – 219 கொறக்கண்டி வீதி (அறுகம்பட்டு வீதி) 20 லட்சம்
16. ஜே – 220 டச்சு வீதி – விவசாய குறுக்கு வீதி 20 லட்சம்
17. ஜே – 220 நாக்கணாவத்தை வீதி 20 லட்சம்
18. ஜே – 221 மயிலாங்கூடல் வேளாங்கண்ணி மாதாகோவில் வீதி 15 லட்சம்
19. ஜே – 221 சிறுவிளான் மணிகண்டன் வீதி 15 லட்சம்
20. ஜே – 221 ஆணைவிழுந்தான் பிள்ளையார் கோவில் வீதி 10 லட்சம்
21. |ஜே – 222 நாதோலை – வசந்தபுரம் வீதி 20 லட்சம்

22. ஜே – 222 கல்வேட்பொயிட்டி சீனிப்பந்தல் வீதி 10 லட்சம்
23. ஜே – 222 பண்டவன்னிக் குழ வீதி 20 லட்சம்
24. ஜே – 223 நவக்கிரி முதலாவது வீதி 10 லட்சம்
25. ஜே – 223 பறந்த கலட்டி வீதி (சடச்சப்பை வீதி) 10 லட்சம்
26. ஜே – 223 கல்வேட்கிராம சபை வீதி 10 லட்சம்
27. ஜே – 224 பொன்மலர் வீதி 20 லட்சம்
28. ஜே – 224 பொன்மலர் குறுக்கு வீதி 15 லட்சம்
29. ஜே – 225 மாவை கலட்டி கீரிமலை வீதி 20 லட்சம்
30. ஜே – 225 கிளானை வீதி இரண்டாவது இடது வீதி 20 லட்சம்
31. ஜே – 226 பழைய கொலணி 4 ஆவது வீதி 10 லட்சம்

32. ஜே – 226 பழைய கொலணி 7 ஆவது வீதி 10 லட்சம்
33. ஜே – 226 கூவில் கருகம்பனை முதலாவது வலது ஒழுங்கை 10 லட்சம்
34. ஜே – 227 காசிப்பிள்ளையார் கோவில் வீதி ஜாமாவீதி 20 லட்சம்
35. ஜே – 227 கோவிற்புலம் பேச்சி அம்மன் கோவில் வீதி 20 லட்சம்
36 – ஜே 228 அன்ன மகேஸ்வரன் கோவில் வீதி 20 லட்சம்
37. ஜே – 229 8 மைல்போஸ்ற் வீதி 4 ஆவது வலது வீதி 20 லட்சம்
38. ஜே – 229 கம்பளை புளொட் சணல் வீதி 20 லட்சம்
39. ஜே – 230 கம்பளை புளொட்சனல் வீதி இடது வலது முதலாவது வீதி 20 லட்சம்
40. ஜே – 230 மூர்த்தி வளவு வீதி 20 லட்சம்
41. ஜே – 231 குறிச்சி வைரவர் வீதி 7 லட்சம்
42. ஜே – 231 மாவிட்டபுரம் கோவில் வீதி 20 லட்சம்
43. ஜே – 231 மாவிட்டபுரம் கோவில் வீதி இரண்டாவது ஒழுங்கை 20 லட்சம்
44. ஜே – 231 மாவிட்டபுரம் கோவில் வீதி மூன்றாவது ஒழுங்கை 20 லட்சம்
45. ஜே – 231 மாவிட்டபுரம் கோவில் வீதி நான்காவது ஒழுங்கை 20 லட்சம்

46. ஜே – 232 சலூன் வீதி (பார்மணியம் வீதி 3 ஆவது வலது ஒழுங்கை) 15 லட்சம்
47. ஜே – 233 மாம்பிராய் குறுக்கு வீதி 8 லட்சம்
48. ஜே – 235 சோதி வீதி 20 லட்சம்
49. ஜே – 235 குருநாதர் சுவாமி வீதி 20 லட்சம்
50. ஜே – 236 அரசடி வீதி 20 லட்சம்
51. ஜே – 237 அமலி வீதி 20 லட்சம்
52. ஜே – 237 காளிகோவில் 2 ஆவது வீதி 20 லட்சம்
53. ஜே – 238 அம்பலவாணர் வீதி 20 லட்சம்
54. ஜே – 238 ஐயனார் கோவில் வீதி 20 லட்சம்
55. ஜே – 239 கண்ணகை அம்மன்கோவில் கட்டுவன் மல்லாகம் இணைப்பு வீதி 15 லட்சம்
56. ஜே – 240 புளொட் சனல் முதலாவது குறுக்கு வீதி 20 லட்சம்

57. ஜே – 241 தெல்லிப்பழை தையிட்டி வீதி மூன்றாவது குறுக்கு வீதி 20 லட்சம்
58. ஜே – 242 மருந்தக வீதி 10 லட்சம்
59. ஜே – 242 போயிதன் வைரவர் வீதி 20 லட்சம்
60. ஜே – 243 பலாலி இராமகிருஷ்ணா குறுக்கு வீதி 20 லட்சம்
61. ஜே – 243 தமிழக வீதி 10 லட்சம்
62. ஜே – 243 அன்னமார் கோவில் முன் வீதி 10 லட்சம்
63. ஜே – 213  7 ஆவது மைல் போஸ்ற் கிழக்கு வீதி 10 லட்சம்
64. ஜே – 245 தேகாமம் வீதி 20 லட்சம்
65. ஜே – 247 வள்ளுவர்புரம் உள்ளக வீதி 20 லட்சம்
66. ஜே – 250 கொலணி முதலாவது குறுக்கு வீதி 10 லட்சம்
67. ஜே – 250 கொலணி 2 ஆவது குறுக்கு வீதி 10 லட்சம்

68. ஜே – 250 கணையாவத்தை வெள்ள வாய்க்கால் வீதி 20 லட்சம்
69. ஜே – 251 வீரமாணிக்கதேவன்துறை வீதி 20 லட்சம்
70. ஜே – 251 தென்னியம்மன் வீதி 20 லட்சம்
71. ஜே – 252 வீட்டுத்திட்ட உள்ளக வீதி 20 லட்சம்
72. ஜே – 253 அம்மன் வீதி குறுக்கு வீதி 10 லட்சம்
73. ஜே – 253 தென்னல்வேலி நீராவியடி வீதி 20 லட்சம்
74. ஜே – 254 கொலணி உள்ளக வீதி 10 லட்சம்  ஆகிய வீதிகளும் மற்றும்,
75. ஜே – 234 காங்கேசன்துறை சிறுவர் பூங்கா 30 லட்சம்
76. ஜே – 222 வலித்தூண்டல் வாழ்வகம் குடிதண்ணீர் வசதி அபிவிருத்தி 10 லட்சம்

ஆகிய அபிவிருத்திகளுக்கு மாவை சேனாதிராசா நிதி ஒதுக்கியுள்ளார்.

இவற்றைவிட வலி.வடக்கில் 12 பாடசாலைகளுக்கு 50 லட்சம் ரூபா செலவில் சிமாட் வகுப்பறைகளும் 15 பாடசாலைகளும் 06 விளையாட்டுக் கழகங்களுமாக மொத்தம் 21 கழகங்களுக்கு விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாவும் 9 பாடசாலைகளுக்கு மலசலகூடம் அமைப்பதற்கு 80 லட்சம் ரூபாவும் 2 பாடசாலைகளுக்கு நீர் விநியோகத் திட்டத்துக்கு 75 லட்சம் ரூபாவும் மூன்று பாடசாலைகளுக்கு சிறுவர் பூங்காவுக்கு 3 லட்சம் ரூபாவும் வலி.வடக்கில் உள்ள 25 கோவில்களுக்கு 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் –

2020 ஆம் ஆண்டு வலி.வடக்கில் சகல வீதிகளும் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுவிடும். அத்துடன் சகல வீதிகளும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எமது பிரதேசம் ஒரு நிறைவான அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக முழுமையாக மாற்றம் பெறும் – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்