திருகோணமலையில் வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை நகர சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் வயோதிபர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பார்ன்ஸ் அண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர், உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் திருகோணமலை துறைமுகப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்