சத்தியலிங்கத்தின் முயற்சியால் விரைவில் வன்னிப் பல்கலை!

யாழ்.பல்கவைக்கழகத்தின் வவுனியா வழாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக்கி, வன்னிப் பல்கலைக்கழகம் என்ற பெயரோடு வடக்கு மாகாணத்தில் இரண்டாவது பல்கலைக்கழகமாக உருவாகவேண்டும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தார். அண்மையில்கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வன்னிப் பிரதேசத்துக்கு விஜயம்செய்தபோதும் அவர் நேரடியாக இந்த அழுத்தத்தைக் கொடுத்துவந்தார். இவரின் இந்த முயற்சியால் யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வழாகம் வன்னிப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் .டம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்;

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும். கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் காரணமாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இதுவரை காணப்படுகிறது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வியானது மிகவும் முக்கியமானதாகும். எனவே, அதனை மேம்படுத்துவது அவசியமாகும். பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்போர் எண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் அதிகரித்துள்ளது. அது பாராட்டத்தக்கது.

இந்நிலையில், மருத்துவ பீடத்திற்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கையை 300ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளத எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்