துரைரட்ணசிங்கத்தால் மூதூரில் 50 வீடுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெரு முயற்சியால் மூதூர் பிரதேசத்தில் பள்ளிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் திருக்குமாரநாதன், மூதூர் பிரதேச செயலர் முபாரக் மற்றும் தமிழரசுக் கட்சியின் மூதூர் கிளைக்குழுத் தலைவர் தர்சன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைக்குழு செயலாளரும் பள்ளிக்குடியிருப்பு வட்டாரக் கிளைத் தலைவருமான ஆ.செல்வநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பள்ளிக்குடியிருப்பு பிரதேச கிராமசேவையாளரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்