தனியான நகரசபை கோரி சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மக்கள் பணிமனையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் இடம்பெற்றது.

ஜனாதிபதிக்கும் , இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி ஆர்பாட்டத்தில் பொது மக்களும் இளைஞர்களும் மிகவும் அமைதியான முறையில். கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்