தாயக பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக பிரித்தானியாவில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்.!

தாயக பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிக்கும் முகமாகவும் இங்கிலாந்து தமிழ் பல்கலைக்கழக மாணவர்களால் மற்றும் புலம்பெயர் தமிழர்களால் பிரிட்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் (FCO, King Charles Street, London, SW1A 2AH ) முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று மார்ச் 16ம் திகதி நடைபெற்றுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்  என்பதையும் , தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கையின் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்