பாகிஸ்தானுடன் போர் மூளுமா? அரபிக்கடலுக்கு நகர்த்தப்பட்ட போர்க் கப்பல்கள்!

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் கடல்வழி தாக்குதல், ஊடுருவலை எதிர்கொள்ளும் நோக்கிலும், அந்நாட்டுடன் போருக்கு தயார் நிலையிலும், அரபிக் கடலின் வடக்கு பகுதியில் போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14 -ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குலுக்கு பதிலடியாக, பாலாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களின் மீது கடந்த 26 -ஆம் திகதி, இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது

தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடைபெற்று வந்தன அந்த சமயத்தில் பாகிஸ்தான் இராணுவம் கடல் வழி தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாகவும், தீவிரவாதிகளும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து வந்தது உளவுத் துறையின் இந்த எச்சரிக்கையை இந்திய கடற்படை தளபதியும் அண்மையில் உறுதிப்படுத்தினார்

இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் கடல் வழி தாக்குதல், ஊடுருவலை எதிர்கொள்ளும் நோக்கிலும், அந்நாட்டுடன் போருக்கு தயார் நிலையிலும், இந்திய கடற்படையின் விமானம் தாங்கிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா அரபிக் கடலின் வடக்குப் பகுதியில் அண்மையில் நிலைநிறுத்தப்பட்டது

இந்த கப்பலுடன் அணுஆயுதங்களை தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களான ஐஎன்எஸ் ஹரியந்த், ஐஎன்எஸ் சக்ரா ஆகியவையும் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும், இந்திய கடற்படையின் 12 போர்க் கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் 60 விமானங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன என்று இந்திய கடற்படை தற்போது தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்