முக்கிய வீரரை இழந்த சென்னை சுப்பர் கிங்ஸ்

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் என்ரிச் நோட்ஜ் ஆகியோர் காயம் காரணமாக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் நாளையதினம் ஆரம்பமாகவுள்ளது.

சென்னையில் இடம்பெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தநிலையில், இலங்கை அணியுடன் இடம்பெற்ற 5வது ஒருநாள் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த, தென்னாபிரிக்கா அணி வீரர் லுங்கி நிகிடி, ஓய்வு எடுக்க வேண்டிய காரணத்தினால் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த முறை விளையாடிருந்த நிலையில், இந்த முறையும் அதே அணியில் விளையாட ஒப்பந்தமாகியிருந்தார்.

இதேவேளை, வேகபந்து வீச்சாளர் என்ரிச் நோட்ஜ் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார்.

அவர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்