வவுனியாவில் கிறிக்கற் மென்பந்து போட்டியில் நாற்சதுர சுவிசேச சபை வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது!

வவுனியாவில் நடைபெற்ற ஆறு பேர் கொண்ட  ஐந்து  ஒவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கற் சுற்றுப் போட்டியில் நாற்சதுர சுவிசேசபையின் வாலிபர்கள் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்

வவுனியா வேப்பங்குளம் நியூ பைட் விழையாட்டு மைதானத்தில் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்தின் ஏற்பாட்டில்  (17) அன்று  நடைபெற்ற இப் போட்டியில் மொத்தமாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 19 கிறிஸ்தவ தேவாலயங்களை சேர்ந்த கிறிக்கற் அணிகள் மோதியிருந்தன

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிறிக்கற் இறுதிச் சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியிருந்த ஈசி மிசன் கிறிஸ்தவ அணியினர் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று நாற்சதுர சுவிசேச அணியினருக்கு எதிராக களத்தடுப்பில் ஈடுபட்டனர்

முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் அணியினர் 48 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்திருந்தனர்  தொடர்ந்து துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈசி மிசன் தேவாலயத்தின் வாலிப அணியினர் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த போது  நாற்சதுர சுவிசேச சபையினர் 04 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்

இக்கிறிக்கற் போட்;டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சிறந்த களத்தடுப்பு, சிறந்த துடுப்பாட்டம் மற்றும் சிறந்த ஆட்டநாயகனுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்