ஓய்வுபெறவுள்ள தினத்தினை அறிவித்த லசித் மாலிங்க..!

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளதாக இலங்கையின் ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் அணிகளின் தலைவரான லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

36 வயதுடைய லசித் மாலிங்க, உலகக் கிண்ண 20க்கு 20 தொடரின் பின்னர், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் பங்கேற்கும் முதல் ஆறு போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி குழாமில் இடம்பெறும் நோக்கில் அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மாத்திரமே உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இல்ஙகை அணியில் இடம்பெறுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில், மும்பை அணி பங்கேற்கும் முதல் ஆறு போட்டிகளில் மாலிங்க பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்