இரு தமிழ் தலைவர்களுடன் இன்றைய போட்டி

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 6 ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது  கொல்கத்தா அணியானது தான் எதிர்கொண்ட தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்சை ஐதராபாத் அணியை தோற்கடித்தது

இதில் 182 ஓட்ட இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு கடைசிக் கட்டத்தில் 19 பந்துகளில் ரஸ்செல் 4 நான்கு ஓட்டங்கள், 4 சிக்சருடன் 49 ஓட்டங்களை விளாசி வெற்றியை தேடித்தந்தார்

இதேவளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தினாலும்  அஸ்வினின் சரியான நேரத்தில் மேற்கொண்ட மன்கட் ரன்அவுட்டினாலும் ராஜஸ்தான் அணியை 14 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

 

அத்துடன் இப் போட்டியின் இன்னொரு சிறப்பம்சம் யாதெனில் இரு அணி தலைவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் வீரர்கள் என்பது  இதுவரை இவ்விரு அணிகளும் 23 போட்டிகளில் மோதியுள்ளன  அதில் கொல்கத்தா அணி 15 போட்டிளிலும், பஞ்சாப் அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்