கனடாவில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!

கனடா பீல் பிராந்தியத்தில் பெருமளவு துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் பிரம்டனைச் சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர் மீது 60க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, கடந்த சனவரி மாதத்தில ஆரம்பிக்கப்ப்டட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், பீல் பிராந்திய வரலாற்றில் ஒரே தடவையில் இவ்வளவு அதிக அளவு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும், கடந்த 21ஆம் திகதி குறித்த அந்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இடங்களான, பிரம்டனில் உள்ள இரண்டு இடங்களிலும், ரொரன்ரோவில் உள்ள இரண்டு இடங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 26 துப்பாக்கிகள், 1,500 ரவைகள், குண்டு துளைக்காத அங்கி ஒன்று, 1.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பெருமளவு போதைப் பொருட்கள் கைப்பற்றப்படடதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்