தனி அறையில் வைத்து 4 நாட்கள்.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்

மதுரை செல்லூர் பகுதிய சேர்ந்த ஆசிரியை நிர்மலா  இவர் அருகில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்  இந்நிலையில் நிர்மலா  அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை ஒத்தக்கடையில் தனி அறை ஒன்றில் வைத்து 4 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது

இதனைத் தொடர்ந்து  குறித்த சிறுவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார்  அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்

இந்நிலையில்  ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்