கனடாவை உலுக்கிய கொடூர சாலை விபத்து: லொறி உரிமையாளர் வெளியிட்ட பகீர் தகவல்

கனடாவில் 16 இளைஞர்களின் கொடூர மரணத்திற்கு காரணமான லொறி உரிமையாளர் முதன் முறையாக தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்  பல மாதங்களாக மாகாண மற்றும் பெடரல் பாதுகாப்பு சட்டவிதிகளை தாம் முறைப்படி பின்பற்றவில்லை என அதில் அவர் தெரிவித்துள்ளார்

கனடாவில் கால்கரி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் Adesh Deol Trucking என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார் 37 வயதான சுக்மந்தர் சிங்  இவரது நிறுவனத்தில் உள்ள லொறி ஒன்றே இளம் விளையாட்டு வீரர்கள் சென்ற பேருந்துடன் மோதியதில் 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்

இந்த விபத்தை ஏற்படுத்திய 30 வயதான சாரதி ஜஸ்கிரட் சிங் சித்து என்பவருக்கு கடந்த 5 தினங்களுக்கு முன்னர் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில், லொறி நிறுவன உரிமையாளர் சுக்மந்தர் சிங் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

இந்த விவகாரம் எஞ்சிய லொறி சாரதிகளுக்கும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக அமையும் என நீதியரசர் ஷான் டன்னிகான் குறிப்பிட்டுள்ளார்

மேலும் சுக்மிந்தருக்கு 5,000 டொலர் அபராதம் விதித்ததுடன், அவரது Adesh Deol Trucking என்ற நிறுவனத்தையும் தடை செய்வதாக அறிவித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்