யுக்ரேன் ஜனாதிபதித் தேர்தலில் நகைச்சுவை நடிகர் முன்னிலையில்

யுக்ரேன் ஜனாதிபதித் தேர்தலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் விலாடிமிர் ஸ்லென்ஸிகி முன்னிலை பெற்றுள்ளார்  சமகால ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 39 வேட்பாளர்களை பின்தள்ளி அவர் முன்னிலையிலுள்ளார்

பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இம்முறை யுக்ரேன் ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றிருந்தது  இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்

இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் யுக்ரேனின் நகைச்சுவை நடிகரான விலாடிமிர் ஸ்லென்ஸிகி முன்னிலை பெற்றுள்ளார்  அவர் இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் 30% வாக்குகளைப் பெற்றுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

முன்னாள் ஜனாதிபதி மற்றும் சமகால ஜனாதிபதியும் தேர்தலில் போட்டியிட்ட பின்னணியில் அவர்களனைவரையும் விட நகைச்சுவை நடிகர் முன்னிலையலிருப்பதாக தேர்தலுக்கு முன்னர் வௌியான கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்திருந்தன

எவ்வாறாயினும் எந்தவொரு வேட்பாளராலும் 50சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பாட்டுள்ளது இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு மிகவும் போட்டித்தன்மை மிக்கதாய் அமையும் என அரசியல் ஆர்வளர்கள் கருதுகின்றனர்

எதிர்வரும் 21ம் திகதி இரண்டாம் கட்ட வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்