ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதி ஓவரில் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது

நேற்றிரவு மொஹாலியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்  முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்கஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது

167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி  144 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சவாலான நிலையில் இருந்தது

எனினும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அடுத்த 7 விக்கெட்களும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன

இறுதி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன்  அந்த ஓவரை வீசிய இளம் வீரரான சாம் கரான் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்