நீட் தேர்வு ரத்து: காங்கிரஸின் அதிரடி தேர்தல் அறிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வெளியிட்டனர்

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன, 2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும், விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை, தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

மேலும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்பன போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

முன்னதாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் செயலாற்றிவரும் மத்திய பாஜக அரசை அகற்றிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்