இந்தியாவின் அதிரடி முடிவு! பச்சைக்கொடி காட்டிய அமெரிக்கா! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்?

பயங்கர யுத்தம் ஒன்று எற்படும்போது நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ’ ரக உலங்கு வானூர்திகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது

இந்த உலங்கு வானூர்திகள் மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அவசியம் தேவை என கூறப்பட்டு வந்தது

இதையடுத்து ரோமியோ உலங்கு வானூர்திகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது  சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும்  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்நிலையில் இந்தியாவிற்கு தற்போது 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் உலங்கு வானூர்திகள் தற்போது தேவை என்பதை உணர்ந்து  விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது  இது அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடியாகவே பார்க்கப்படுகிறது

ரோமியோ உலங்கு வானூர்திகள் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளிலும்  அவசர காலங்களில் கப்பலுடன் இணைத்து பயன்படுத்தவும் உதவும்  மேலும் பிரிட்டனின் பழைய கடல் கிங் ஹெலிகாப்டர்களில் இல்லாத புதிய நுட்பங்கள் பல இவற்றில் உள்ளன  அவற்றிற்கு மாற்றாக இந்த ரோமியோ உலங்கு வானூர்திகள் உபயோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை எல்லைப் பகுதிகளில் இடம்பெறும் போருக்கும் இந்த ரோமியோ வகை ஹெலிஹொப்டர்கள் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பாகிஸ்தான் படைகளைச் சமாளிக்கும் வகையில் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக தனது படை நிலையினை பலப்படுத்திவருவதால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் படைத்துறை ஆய்வாளர்கள் மத்தியில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்