லண்டன் தமிழ் சந்தையில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பரப்புரை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடு கடந்த தமிழீழ அரசின் 3வது பொதுத் தேர்தலுக்கான தொடர் பரப்புரைகள் நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையில் கடந்த 6ம் 7ம் திகதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சாமெளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற லண்டன் தமிழ் சந்தை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் நாடுகடந்த தமிழீழ அரசின் போட்டியிடும் வேட்பாளர்களும் செயற்பா ட்டாளர்களும் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது

குறித்த நாட்களில் ஆயிரக்கணக்கோருக்கு இத்தேர்தல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்தியம்பியமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்