பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கல்முனை நகரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே சர்வமத தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பிற்கு கடந்த 7 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என கல்முனை மறுமலர்ச்சி கழகம் குறிப்பிட்ட சொற்பதம் கல்முனை நகரில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிளர்ச்சியை தோற்றுவிக்கும் என்பதன் அடிப்படையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்து அவ் ஊடக மாநாட்டிற்கு தடையுத்தரவை பெற்றிருந்தார்.

இவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் இனவாதிகளுக்கெதிராக சர்வமத தலைவர்கள் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

30 வருடங்களுக்கு மேலாக இயங்கிரும் அரச திணைக்களமான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதம் என சுட்டிக்காட்ட யார் இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பிரதேச செயலாளர், உப செயலாளர் 250 மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டு இயங்கும் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளவர்கள் சட்டவிரோதம் என்பதனூடாக இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் விதமாக செயற்படுவது தமிழர்களது மனங்களை புண்படுத்துவதாக அமைகின்றதென தெரிவித்தனர்.

இலங்கை அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப இயங்கிவரும் பிரதேச செயகத்தை தரமுயர்த்த தடையாக இருக்கும் குறுகிய மனம்கொண்ட சிலர் சட்டவிரோத பிரதேச செயலம் என்பதனூடாக தங்களது வாக்கு வங்கியை பாதுகாக்கவே முயல்கின்றனரென்றும் சர்வமத தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்