உலகத் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர்!

சித்திரைப் புத்தாண்டு நாளாகிய இன்றைய தினம் உலகத் தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாலும் சிறிலங்காவின் சிங்கள மக்களாலும் இன்றைய தினம் வசந்த காலத்தை வரவேற்கும் சித்திரைப் புத்தாண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் அவ்ஸ்திரேலியப் பிரதமர் தனது வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

அவுஸ்திரேலியாவில் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்படுகின்ற நிலையில் ஆஸிவாழ் தமிழர்களுக்கும் மற்றும் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அந்த விசேட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்