துணுக்காய் சந்தியில் கோர விபத்து

இன்று காலை துணுக்காய் ஐயங்கன்குளத்தில் இருந்து கள்விலான் எனும் இடத்திற்கு மணல் ஏற்று வதற்கு உழவு இயந்திரத்தில் நால்வர் வருகை தந்தபோது துணுக்காய் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டுள்ளது

விபத்துக்குள்ளான பழைய முருகண்டியைச்சேர்ந்த குகனேஸ்வரநாயகம் நிசாந்தன் வயது 27 , ஐயன்கன்குளத்தைச்சேர்ந்த நவரத்தினம் நவநீதன் வயது 27 ,சிவகணேசமூர்த்தி சிவரூபன் வயது 27 மற்றும் ராஜ்குமார் கதிர்வாணன் வயது 17  மற்றும் ஒரு நபர் இதில்  காயமடைந்த நால்வர் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் கு.நிசாந்தன் உயிர் இழந்துள்ளார்

மேலும் உழவு இயந்திர வாகன சாரதியான ராஜ்குமார் கதிர்வாணனிற்க்கு வாகனஅனுமதி பத்திரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக ந.நவநீதன்,சி.சிவரூபன் ஆகியோர் வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பபட்டுள்ளனர் மேலும் இது தொடர்பாக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டுவருகின்றர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்