அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்; இருவர் கைது!!

கோனகங்ஆர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் இருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பில் கோனகங்ஆர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்