தடம்புரண்டது யாழ் – கொழும்பு ரயில்; மயிரிழையில் தப்பினார்கள் பயணிகள்!

புத்தாண்டு தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டது ரயில் தடம்புரண்டமையால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் நேற்றுப் பாதிக்கப்பட்டன

அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் நேற்று தடம்புரண்டது எனக் கூறப்படுகின்றது ரயிலின் ஒரு பெட்டி இவ்வாறு தடம்புரண்டது இந்த அனர்த்தம் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

தடம்புரண்ட ரயில் பெட்டியை சீர்செய்து ரயில் போக்குவரத்தை சீராக முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்