அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா

கேரள கஞ்சா ஒரு தொகையை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடொன்றை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்றரை கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல வருட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று அனுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்