பின்லாந்து தேர்தலில் இடதுசாரித் தரப்பு வெற்றி

பின்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடைபெற்று முடிந்த பின்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக பின்லாந்து இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் Antti Rinne அறிவித்துள்ளார்

தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகிதம் வாக்குகளையும் யூரோ செப்டிக் ஃபின்ஸ் கட்சி 17.5 சதவிகிதம் வாக்குகளைம் பெற்றுள்ளனர்

99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளன

சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான Antti Rinne 56 வயதுடைய ஒரு தொழிற்சங்க வாதி என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்