கோத்தபாய முட்டுக்கட்டை இல்லை! முக்கிய உறுப்பினரை களமிறக்கும் கட்சி

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவாலானவராக இருக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்

காலி, அக்மீமன பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறிய விஜேபால ஹெட்டியாரச்சி நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கும் என்றும் கூறியுள்ளார்

ஐக்கிய தேசிய முன்னணிக்கு கோட்டாபய ராஜபக்ஷ சவாலானவர் அல்ல எங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை எந்தவொரு வேட்பாளரையும் எதிர்தரப்பினர் நிறுத்தட்டும் நாங்கள் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒருவரை அதுவும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக்கள் என அனைவரும் இணைந்து தெரிவு செய்யும் ஒருவரை முன்னிறுத்துவோம்

அதற்கான தீர்மானத்தை எடுக்க அனைவரும் தயாராக உள்ளதாக நான் நினைக்கின்றேன் முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தினால் மஹிந்த ராஜபக்ஸவுடன் போட்டியிடக்கூடிய ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் அவ்வாறான வேட்பாளர் ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவராக கூட இருக்கலாம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்