மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்த கொடூரம்- பொலிஸார் குவிப்பு!

மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தாராவியில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது மிகவும் உயரத்தில் இருந்து கட்டுமானப் பொருட்கள் கீழே விழுந்தன அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று நொறுங்கியது

அதில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர் இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர் மேலும் இந்த சம்பவம் தொடா்பாக அந்த கட்டடத்தின் கட்டுமான ஒப்பந்தகாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்