இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளது

இதுவரை 100 கோடி பேர் இந்த டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் சீனாவில் இந்த டிக் டாக் Douyin என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது இந்தியாவில் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரபலமாக உள்ளது மேலும், டிக் டொக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்

இந்த டிக் டொக் செயலியை பொதுமக்கள் மாத்திரமல்லாது, தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் இந்த டிக் டொக் செயலியில் ஆபாசக் காட்சிகளும் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளும் தரவேற்றம் செய்யப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன

தமிழ்நாட்டில் இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தன இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், டிக் டொக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது அந்த தடையை எதிர்த்து டிக் டொக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் டிக் டொக் செயலி நீக்கப்பட்டுள்ளது

முன்னதாக இந்த செயலிக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டது

எனினும், குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என டிக் டொக் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தத் தடை அங்கு நீக்கப்பட்டது

இந்த செயலிக்கு வங்கதேசத்திலும் தடை உள்ளது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை மீறுவதால் இந்த செயலிக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது தற்போது அங்கு குழந்தைகளுக்கென பிரத்தியேக டிக் டொக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்