கோட்டா களமிறங்காவிட்டால் இன்னொரு ராஜபக்ச தயாராம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவருக்குப்பதிலாக களமிறங்க மேலும் ராஜபக்சவினர் இருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“தற்போதைய அரசு கோட்டாபய ராஜபக்ச மீதுள்ள பயத்தினால் பல்வேறு முறைகளைக் கையாண்டு அவரைக் களமிறங்கவிடாமல் செய்ய முயற்சிக்கின்றது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரைத் தெரிவு செய்ய முடியாமல் திக்குமுக்காடுகின்றது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்