அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக உறுப்பினர்கள் இருக்கக்கூடாது. தவிசாளர் ஜெயசிறில்

காரைதீவு பிரதேசசபையின் 14 வது மாதாந்த சபை அமர்வு இன்று (18) காலை 10 மணியளவில் கௌரவ தவிசாளர்  கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் அவர்கள்:  அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்திற்கு வருகின்ற  அபிவிருத்திகளுக்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் தடையாக இருக்கக்கூடாது என சபையின் தலைவர் என்றவகையில் சபையோருக்கு வலியுத்தினார்.
 
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற பிரதேசசபை உறுப்பினர்கள் வெறுமனே சபையின் வருமானத்தை நம்பிருக்காமல்  பிரதேசசபையின் உறுப்பினர்கள் அமைச்சர் பெருமக்களை,பாராளுமன்ற உறுப்பினர்களை  அணுகி அபிவிருத்திக்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு வித்திட முன்வரவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் வருமானம் குறைந்த சபைகளுள் ஒன்றான காரைதீவு பிரதேசசபையின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கோடு பிரதேசத்தில் வரி அறவீடுகளை  அதிகரிக்கும் திட்டத்திற்கான பிரேரணை சபையோரால் நிறைவேற்றப்பட்டது.
 காரைதீவு பிரதேசத்தில் முஸ்லிங்களும்,தமிழ்மக்களும் வசித்துவருகின்றனர். சகோதர இன மக்கள் உணவிற்காக மாட்டிறைச்சியை பெற்றுக்கொள்வதற்காக வேறு  பிரதேசங்களிலுள்ள மடுவங்களில் அறுக்கப்படுவதனால்  சுகாதரமற்ற இறைச்சி பிரச்சினைகளை அண்மைகாலங்களில் எதிர்நோக்கியிருந்தனர் . இதனால் பிரதேசசபைக்கு வருமானமும் இல்லாமல் போகின்றது.
மடுவம் இன்மையால் இரகசியமாக தனியார் மாடுகளை அறுத்து கழிவுகளை வீதிகளில்,பொது இடங்களிலும் வீசிவருவதனால் சுகாதார சீர்கேடுகளை மக்கள் எதிர்நோக்வதோடு அண்மையில் காரைதீவு ஆலயத்திற்கு அருகில் வீசிவிட்டு சென்றமையினால் இன முறுகல் ஏற்பட்டதனை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
சபையிலே  முறையான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வாதபிரதிவாதங்களும்,கருத்துக்களும் கலந்தாலோசனைகளும்  பெறப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்