ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா – யேசுதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா – யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தமிழரசன்.

`தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.

இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார்.

”பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நந்தலாலா’ படத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்தில் யேசுதாஸ் பாடிய ‘யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்