தொடர் குண்டுவெடிப்பு: நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு பதிந்துள்ளார்.

“இலங்கையில் இன்று இடம்பெற்ற சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கை மக்களுடன் இச் சந்தர்ப்பத்தில் இந்தியா தொடர்ந்தும் துணைநிற்கும் என்ற விடயத்தை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்துக்காக போராட வேண்டும். இதற்கு திரைமறைவில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என அவர் பதிவுசெய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்