இலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்  அறிவித்துள்ளது.

இந்திய தூதரகம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியர் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஐவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் கே.ஜி.ஹனுமந்தரயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இரு இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மொத்தமாக ஐவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று, எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்