உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தோருக்காக கங்காராமையில் வழிபாடு

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்திக்காக கொழும்பு கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இவ்வழிபாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தித்து இந்நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு, அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டது.

கங்காராம விஹாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் ஆலோசனைகளுக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மகா சங்கத்தினருடன் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்