சுவிஸில், புளொட் அமைப்பின் மேதின ஊர்வலம்..!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையும் கலந்து கொண்டது.

கடந்த 1984 முதல் சுவிஸ் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புளொட் சுவிஸ் கிளையும் கலந்து கொள்ளும் ஊர்வலமானது, முப்பத்தைந்தாவது வருடமாகவும் நடைபெற்றது.

இம்முறை இதில்

“தமிழினத்தின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காண வேண்டும், வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்க வேண்டும். அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்.

அரசியல் கைதிகளை இலங்கை அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.
சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்ய வேண்டும்.

போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உதவியும் கிடைக்க வேண்டும்.

வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்.

மத ரீதியிலான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கண்டிக்கப்பட்டு, இன, மதவாத சக்திகள் முற்றாக அடக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும்.
“அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே’

போன்ற சுலோகங்கள் தங்கிய வண்ணமும், கோஷமிட்டபடியும் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் த.ம.வி.க (புளொட்) சுவிஸ்கிளை சார்பாக கலந்து கொண்டார்கள்.

இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Sihl Post (Lagerstrasse)ல் இருந்து ஆரம்பமாகி BürkliPlatz (Bellevuey) யில் முடிவடைந்தது.

இவ் மேதினத்தில் த.ம.வி.கழக (P.L.O.T.E) சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்