தமிழ் மொழியை பேணிப்பாதுகாக்கும் தமிழ் கல்விச்சேவையின் அளப்பரிய பணி!

தமிழ் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இன்று (04.05.2019) 25ஆண்டுகளாக சுவிஸ் நாடு தழுவிய தாய்மொழியான எங்கள் தமிழ்மொழி பொதுத்தேர்வை 64 தேர்வு நிலையங்களில் நடத்துகின்றது.இதில் 5243 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொள்கிறார்கள்,சமய பாடத்துக்கும் மாணவர் பங்குகொள்கிறார்கள்,ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு 12வரை இத்தேர்வு நடைபெறுகிறது.

எழுத்துத்தேர்வு,புலன்மொழித்தேர்வு கேட்டலும் விளங்கிக்கொள்ளலும்,புலன்மொழித்தேர்வு பேசுதல்,மூன்று பகுதிகளாக நடைபெறுகிறது,சமயம் எழுத்து தேர்வும் நடைபெறுகிறது,சரியாக காலை 9மணியளவில் பரீட்சை ஆரம்பமானது ஆசிரியர்கள் அறிவுறுத்தல்களை கூறினார்கள், மாலை 3மணியளவில் பரீட்சை நிறைவுபெறும்.

மாணவர்கள்,பெற்றோர்கள் காலையில் ஆர்வத்தோடு பரீட்சை நடைபெறும் மண்டபத்துக்கு வந்திருந்தார்கள், தமிழ்மொழி அழிந்து விடாமல் பேணிப்பாதுகாக்கும் தமிழ் கல்விச்சேவைக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் ,நன்றிகளும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்