புத்தாக்க நாணயத்தாள் போட்டி – முதலிடம் பிடித்தது கனடா!

புத்தாக்க நாணயத்தாள் போட்டியில் கனடா முதலிடத்தினை பிடித்துள்ளது.

ஐ.பீ.என்.எஸ். என்ற அமைப்பினால் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், முதலிடம் பெற்றுள்ள கனடாவின் புதிய 10 டொலர் நாணயத்தாள் கடந்த வருடம் நெவம்பர் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், இந்த போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் 200 பிராங் நாணயத்தாள் இரண்டாமிடத்தினை பிடித்துள்ளது.

மேலும், நோர்வேயின் 500 குரோணர் நாணயத்தாள் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.

ரஷ்யாவின் 100 ரூபிள் நாணயத்தாள் 4 ஆம் இடத்தினையும், சொலமன் தீவுகளின் 40 டொலர் நாணயத்தாள் 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்