நீக்கப்பட்டது சமூகவலைத்தளங்களுக்கான தடை !

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இரவு திடீரென வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் திடீரென விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த தடை ஏப்பிரல் 30 ஆம் திகதி நீக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மீண்டும் இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்