மலையகத்திலும் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகை குறைவு

அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 06.05.2019 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் மலையகத்திலும் அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு செல்லும் பைகளை பொலிஸார் சோதனை செய்த பிறகு தான் பாடசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.

தரம் 6 லிருந்து 13 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை 06.05.2019 அன்று ஆரம்பிக்கவும், தரம் 1 தொடக்கம் 5 வரை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்ககைகளைஎதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பாதுகாப்பு கருதி பிற்போடப்பட்ட இரண்டாம் தவணை கல்வி நடவடிக்ககைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்