புண்ணாலைக்கட்டுவன் விபத்தில் பெண் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குப்பிளான் தெற்கு பகுதியினை சோ்ந்த கே.சுசிலா (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பலாலி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் வான், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியினை மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும் வான் சாரதி மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியிருக்கலாமென பொலிஸாா் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளாா்.

குறித்த சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணையினை சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்