சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை!

கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இதுகுறித்த சிறப்பு அறிவித்தல் ஒன்றினையும் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளதுடன், அதனை பாடசாலையின் பிரதான வாயிலிலும் காட்சிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்