போதைப்பொருள் வர்த்தகர் மீதே துப்பாக்கிச்சூடு – புத்தளத்தில் தீவிர பாதுகாப்பு

புத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் முற்பட்டபோது, அவர் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதன்போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்