நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்!

புனித நோன்பு நாளை(செவ்வாய்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது.

இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்