பலத்த பாதுகாப்பு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம் மாணர்கள் வருகைகயில் வீழ்ச்சி

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின எனினும் மலையகத்தில் உள்ள பிரதான பாடசாலைகள் உட்பட ஏனைய பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் கடந்த 22ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் கொழும்ப உட்பட ஏனையு பிரதேசங்களில் தீவிர வாதிகள் மேற்கொண்ட குண்டு தாக்குதல் காரணமாக பாடசாலைகள் ஆரம்பம் தாமதமடைந்தன.

இன்று (06) தரம் ஆறு தொடக்கம் 13 வரை பாடசாலைகள் பொலிஸ் ,பாதுகாப்பு படையினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் சோதனைக்கு பின் மாணவர்கள் பாடசாலைக்குள் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன.

தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புக்களுக்கு எதிர்வரும் 13 ம் திகதியே இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதே வேளை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி வரும் வாகனங்கள் யாவும் பாடசாலைக்கு அப்பால் உள்ள வீதி ஓரங்களில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தன.

பாதுகாப்பு நடவடிக்கை பலபடுத்தப்பட்ட போதிலும் அதிமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாதுகாப்பு கருதி அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஹட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த படமெடுத்து சென்றதாக பரவிய தகவலையடுத்து அப்பகுதியில் நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து பாதுகாப்பு மற்றும் கல்வி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்