முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுங்கள் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் இலங்கையர்கள் செயற்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

‘நீர்கொழும்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில், இந்த நிலையைக் கட்டுபடுத்துமாறு பொறுப்பானவர்களுக்கு அறிவித்துள்ளேன்.

கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் செற்பட வேண்டும் என கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், ஏனைய தரப்பினரிடமும் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் கோருகின்றேன்.

பொய்த் தகவல்கள், மக்களைத் தூண்டிவிடும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் நான் உங்களிடம் கோருகின்றேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்