தேசிய விருது எப்படி கிடைத்தது? புதிய சர்ச்சையில் 2.0 வில்லன் அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீப காலமாக சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.

இந்திய குடியுரிமையை துறந்து, கனடா நாட்டு குடியுரிமை பெற்றது பற்றி அவர் மீது சர்ச்சை எழுந்தது. “கனடா தான் என் வீடு” என அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் வைரல் ஆனது.

மேலும் பிரதமர் மோடியை அக்ஷய் குமார் பேட்டி எடுத்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய குடிமகனாக இல்லாத நடிகர் அக்ஷய் குமாருக்கு எப்படி 2016ல் தேசிய விருது கொடுக்கப்பட்டது என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பினார். இது பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

வெளிநாட்டினரையும் தேசிய விருதுக்காக பரிசீலிக்கலாம் என விதி இருப்பதாக சினிமா வட்டாரத்தினர் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்